54 சுங்கச்சாவடிகள் கட்டணம்: ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு
54 சுங்கச்சாவடிகள் கட்டணம்: ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு
ADDED : ஏப் 01, 2024 05:26 AM

சென்னை: தமிழகத்தில் 6,805 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 63 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இவற்றில் இலகு ரகம், கன ரகம் என, வாகனங்களின் தன்மைக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகள் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 54 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல், சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சமாக 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஒரே நேரத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதால், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், சத்தமின்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது.

