ADDED : பிப் 26, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க டி.எஸ்.பி., லாமேக் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆதிவராகநத்தம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கும்பலை பிடித்து புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பி.முட்லுார் மணிமாறன் மகன் விநாயகமூர்த்தி,21; கீரப்பாளையம் சதீஷ்குமார் மகன் நவீன், 19; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீரப்பன் மகன் அரவிந்த் (எ) வீரமணி, 27; தியாகவல்லியை சேர்ந்த ஏழைமுத்து மகன் சவுந்தர், 22; புவனகிரி ஜனார்த்தனன் மகன் தமிழ்மணி, 23; பெருமாத்துார் ரங்கநாதன் மகன் ராஜேஷ், 26; என்பதும், கஞ்சா விற்றதும் தெரிந்தது.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்து, ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.