ADDED : மே 10, 2024 04:35 AM
நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களுக்கு, பல ஆண்டுகளாக பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், பல்வேறு சிரமங்களை பொறியாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
விருப்ப மாறுதல் என்ற பெயரில், ஒரு பிரிவில் பணியாற்றும் சில பொறியாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதே பிரிவில் பணி மாறுதல் பெற்று வருகின்றனர். இதனால், ஒரே இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பணியாற்றும் நிலை உள்ளது. அதே நேரத்தில், சில பொறியாளர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.
எனவே, நடப்பு ஆண்டாவது, நெடுஞ்சாலைத் துறையில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்று பணியாற்றி வரும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களுக்கு, பொது பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நெடுஞ்சாலைத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
- எம்.மாரிமுத்து,
பொதுச்செயலர், தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம்.