கி.கிரி வழியாக கடத்த முயன்ற 6.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கி.கிரி வழியாக கடத்த முயன்ற 6.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஆக 07, 2024 12:21 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகனசோதனை நடத்தினர். அதன்படி, எஸ்.ஐ., பெரியசாமி தலைமையிலான தனிப்படையினர் ஓசூர், ராயக்கோட்டை சாலையில், அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 15 பைகளில், 50 கிலோ எடை கொண்ட, 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதில், தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டையூரை சேர்ந்த பிரகாஷ், 37 என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர், சென்னை - கிருஷ்ணகிரி சாலை சுண்டேகுப்பம் தேவாலயம் அருகில், வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பிக்கப் வேனில், 60 பைகளில், 3,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற, திருப்பத்துார் மாவட்டம் காதர்பேட்டையை சேர்ந்த ஷாஜகான், 40 என்பவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், எஸ்.ஐ., பெருமாள் தலைமையிலான போலீசார் பாகலுார் - மாலுார் சாலை பேரிகை பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பிக்கப்வேனில், 60 பைகளில், 3,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சாப்பூரை சேர்ந்த ஸ்ரீதரா, 35, என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.