மதுரை கப்பலூரில் தனியார் கூரியர் குடோனில் தீ விபத்து
மதுரை கப்பலூரில் தனியார் கூரியர் குடோனில் தீ விபத்து
UPDATED : ஜூலை 24, 2024 09:49 PM
ADDED : ஜூலை 24, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை கப்பலூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
மதுரை கப்பலூரில் தனியார் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் இன்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மற்றும் மதுரை விமான நிலைய தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீர்ர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

