ADDED : ஏப் 23, 2024 11:28 PM
சென்னை:நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து புகார் பெற்று விரைந்து தீர்வு காண, குறைதீர்க்கும் மொபைல் போன் செயலியை நுகர்பொருள் வாணிப கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
நெல் விளையும் மாவட்டங்களில், வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகிறது. அங்கு, விவசாயிகள் எடுத்து வரும் நெல், எடை போட்டு வாங்கப்படுகிறது.
இதற்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பில், 100 டன் எடை கொண்ட குவிண்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
இந்த பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
கொள்முதல் நிலையங்களின் ஊழியர்கள், எடையை குறைத்து வாங்குவது, ஒரு மூட்டைக்கு, 50 ரூபாய் வரை கமிஷன் வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவோர், சென்னையில் உள்ள வாணிப கழக அலுவலக கட்டுப்பாட்டு மையத்தின் எண்ணில் புகார் அளிக்கலாம்.
ஒரே சமயத்தில் பலர் புகார் அளிக்கும் போது, இணைப்பு கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகளிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் புகார் பெற்று, விரைந்து தீர்வு காண, குறைதீர்க்கும் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விவசாயிகள், நெல்லை வழங்குவதற்கான விபரங்களை, இந்த செயலியில் பதிவு செய்யலாம். அதில், நெல்லை எப்போது எடுத்து வர வேண்டும் என்ற விபரமும் தெரிவிக்கப்படும்.
விரைவில், மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*

