ADDED : மார் 28, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 4, 5ம் தேதிகளில் தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் பா.ஜ., மட்டும் 19 தொகுதிகளிலும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, விரைவில் தமிழகம் வர உள்ளார். இது தவிர, 18 மத்திய அமைச்சர்களும் தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்., 4, 5ல் தமிழகம் வருகிறார். அவர், சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

