ADDED : ஆக 27, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அண்ணாமலை பேசியிருந்தார். இந்நிலையில் அவர் அவதுாறாக பேசியதாக கூறி திருநெல்வேலியில் அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவினர் அன்பு அங்கப்பன் தலைமையில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் அண்ணாமலை உருவ பொம்மையை செருப்பால் அடித்து, தீயிட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.