ADDED : மே 21, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், நீர் இருப்பு 13 டி.எம்.சி.,யாகவும் குறைந்து விட்டது. இதனால், நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.
எனவே, குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டிருக்கும் விவசாயிகளுக்கு மாற்று வழி என்ன என்பதை, தமிழக அரசு காட்ட வேண்டும். நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான், சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். இதற்கு, தமிழக அரசின் குறுவை தொகுப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

