ADDED : மார் 28, 2024 10:04 PM
சென்னை:தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் இரண்டு நீதித்துறை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் இடம் பெற்ற தேடுதல் குழுவை, தமிழக அரசு அமைத்து உள்ளது.
இக்குழுவினர், இப்பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் www.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, ஏப்., 30 மாலை 5:00 மணிக்குள், விரைவு தபால் அல்லது பதிவு தபாலில், 'ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, தேடுதல் குழு தலைவர், இரண்டாம் தளம், கத்தோலிக் சென்டர், 108. அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை - 600001' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

