ராகுல் பங்கேற்ற ஒரே கூட்டத்தால் பா.ஜ., காலியாகி விட்டது! அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
ராகுல் பங்கேற்ற ஒரே கூட்டத்தால் பா.ஜ., காலியாகி விட்டது! அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
ADDED : ஏப் 14, 2024 06:26 AM

திருப்பூர் : ''கோவையில் ராகுல் பங்கேற்ற ஒரே ஒரு கூட்டத்தால் பா.ஜ., காலியாகிவிட்டது. மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்து விட்டது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா, திருப்பூர் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து அவிநாசியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல் இது. சமத்துவம் நிலைக்க, சகோதரத்துவம் தழைக்க, மத நல்லிணக்கம் செழிக்க, சமூக நீதியை நிலை நாட்ட, இண்டியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
கோவையில் ராகுல் பங்கேற்ற கூட்டம், பாகுபலி மாதிரி பிரமாண்டமாக இருந்தது. ராகுல் பங்கேற்ற ஒரே ஒரு கூட்டத்தால் பா.ஜ., காலியாகிவிட்டது; மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்து விட்டது.
2,000 ஆண்டு அடிமை
தமிழக மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என ராகுல் நிரூபித்து விட்டார். இந்தியாவை, இந்தியர்களை புரிந்து கொள்ள, தனக்கு வழிகாட்டியாக இருப்பது தமிழகமும், தமிழக வரலாறும், அரசியலும் தான் என, ராகுல் சுட்டிக் காட்டினார்.
இது, சாதாரண தேர்தல் அல்ல; சமூக நீதியை நிலைநாட்டும் இண்டியா கூட்டணி; சமூக பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல். 2,000 ஆண்டு அடிமை தனத்துக்கு, தொடர் போராட்டம் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்து, கல்வி, வேலை வாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, அருந்ததியின, சிறுபான்மையின மக்கள் என, அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதி காக்கிறோம்.
ரத்து செய்வார்
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீடை ரத்து செய்வார். இந்தியா விடுதலை பெற்ற போது, 'பல தரப்பட்ட மக்கள் வாழும் நாடு அமைதியாக இருக்காது' என, உலக நாடுகள் கூறின.
அந்த கணிப்புகளை பொய்யாக்கி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தலைநிமிர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம், அரசியலமைப்பு சட்டம் தான். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,
தொடர்ச்சி 5ம் பக்கம்

