ADDED : ஏப் 27, 2024 02:40 AM
துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர், 2006 ல் அமைச்சராக இருந்தபோது
வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தது. இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மாவட்ட பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார். அமைச்சர் தரப்பினரும், அமலாக்கத்துறை தரப்பினரும் ஆஜராகவில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்கறிஞர் மட்டும் ஆஜராகினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜுன் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

