அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த கோலியனுார் கூட்ரோட்டில் நேற்று கோலியனுார் ஒன்றிய பா.ம.க., இளைஞரணி செயலாளர் ஞானவேல், 38; என்பவர், அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.
அனுமதியின்றி பேனர் வைத்ததாக கோலியனுார் வி.ஏ.ஓ., அருள்ராஜ், வளவனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ஞானவேல் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

