துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு
துணை நடிகைக்கு கொலை மிரட்டல் சாத்தான்குளம் போதகர் மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2024 02:04 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை அருகே உள்ள அனுகிரக புரத்தைச் சேர்ந்தவர் எமி, 54. திரைப்பட துணை நடிகை. அதே பகுதியில் துாத்துக்குடி- நாசரேத் திருமன்டிலத்திற்கு சொந்தமான இடத்தில் சமூக சேவை மையம் நடத்தி வருகிறார்.
அங்கிருந்த, சிசிடிவி கேமராக்கள் டிச. 27ல் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சாத்தான்குளம் கிறிஸ்தவ சேகர குருவானவர் டேவிட் ஞானையா விடம் எமி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் எமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டேவிட் ஞானையா, சுகந்தராஜா, கற்பகவள்ளி, ரிச்சி லயனேஸ்வரன், தட்டார்மடம் சண்முகநாதன், புத்தன்தருவை குமார், தனபால், சாலமோன் ஆகியோர் மீது தட்டார்மடம் போலீசில் எமி நேற்று புகார் அளித்தார்.
இதையடுத்து, சேகரகுரு டேவிட் ஞானையா உள்ளிட்ட 8 பேர் மீதும் 147, 448, 380 (என்பி), 427, 294 (பி), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

