ADDED : மார் 31, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு, வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை அருகே நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, பணம் வினியோகம் செய்த வீடியோ பரவியது.
இந்த வீடியோக்களை, மாவட்ட தேர்தல் அலுவலரான ராஜகோபால் சுன்கரா, காவல்துறை விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார், பெயர் மற்றும் விலாசம் தெரியாத ஆண், பெண் என இருவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

