பெண்ணிடம் அத்துமீறல் கோவை ஏ.சி., மீது கேரளாவில் வழக்கு
பெண்ணிடம் அத்துமீறல் கோவை ஏ.சி., மீது கேரளாவில் வழக்கு
ADDED : ஆக 22, 2024 10:51 PM
கோவை:கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் துவாரக் உதயசங்கர், 54; கனடாவில் வசிக்கிறார். இவருக்கு கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ், 50, உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. புது படங்கள் தயாரிப்பு பணிக்காக ஜானி தாமஸ், 2.75 கோடி ரூபாய் வரை, உதயசங்கரிடம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திருப்பி கேட்ட போது, இழுத்தடித்துள்ளார். இதனால், உதயசங்கர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, தயாரிப்பாளர் ஜானி தாமஸ், மே மாதம் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, கோவை போலீசார், கேரள மாநிலம் எர்ணாகுளம், பூனித்துரா பகுதியில் உள்ள ஜானி தாமஸ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவரது 26 வயது மகளிடம் போலீசார் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பணத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சொல்லி மிரட்டியதாகவும், கேரள மாநில மகளிர் ஆணையம் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட போலீசில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து, எர்ணாகுளம் மாவட்ட போலீசார், கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜன் மற்றும் அவருடன் சென்ற ஜின்ஸ் தாமஸ், 42, லிண்டோ, 40, லிங்கன், 45, ஆகிய போலீசார் மீது, நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

