sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'எம்.ஜி.ஆருக்கு அளித்த அதே மரியாதையை கருணாநிதிக்கும் மத்திய அரசு தந்துள்ளது'

/

'எம்.ஜி.ஆருக்கு அளித்த அதே மரியாதையை கருணாநிதிக்கும் மத்திய அரசு தந்துள்ளது'

'எம்.ஜி.ஆருக்கு அளித்த அதே மரியாதையை கருணாநிதிக்கும் மத்திய அரசு தந்துள்ளது'

'எம்.ஜி.ஆருக்கு அளித்த அதே மரியாதையை கருணாநிதிக்கும் மத்திய அரசு தந்துள்ளது'


ADDED : ஆக 20, 2024 04:23 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “தி.மு.க.,வும் - பா.ஜ.,வும், சிந்தாந்த அடிப்படையில் எதிரும், புதிருமாக பயணித்து வருகின்றன,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, அரசு சார்பில் நாணயம் வெளியிட, மத்திய அரசிடம் தி.மு.க., அரசு அனுமதி பெற்றது.

கூட்டணியில் இல்லை


தி.மு.க., அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

கட்சியின் மூத்த தலைவரை, மாநில தலைவரான நான் வரவேற்பது கடமை. இதை, அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி, அரசியல் கலந்து பேசுவது, வேதனைக்கு உரியது.

கடந்த 2017ல் அ.தி.மு.க.,வும் - பா.ஜ.,வும் கூட்டணியில் இல்லை.

அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., கோரிக்கையை ஏற்று, எம்.ஜி.ஆருக்கு, சிறப்பு நாணயம் வெளியிட்டது மத்திய அரசு.

பா.ஜ., ஆட்சியில் இருக்கும் போது, எம்.ஜி.ஆருக்கு என்ன மரியாதை செய்ததோ, அந்த மரியாதையை தான் கருணாநிதிக்கும் செய்துள்ளது. இதில், பா.ஜ., அரசியலை கலக்கவில்லை. அரசியல் நாகரிகம் என்ன என்பதை, பா.ஜ., முழுதுமாக உணர்ந்துள்ளது. தி.மு.க.,வும் - பா.ஜ.,வும் சிந்தாந்த அடிப்படையில் எதிரும், புதிராக பயணித்து வரும் கட்சிகள்.

ரகசிய உறவு என்று கூறும் பழனிசாமி, எதற்காக பா.ஜ., உடன் கூட்டணியில் இருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்ப்பாட்டம்


அரசியல், லாப நஷ்ட காரணங்களுக்காக குறை கூறுவது நாகரிகமற்றது. நாளை, ஜெயலலிதாவுக்கு விழா எடுக்க விரும்பினாலும், அதை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு செய்யும்.

தி.மு.க.,வை எதிர்த்து பேசுவது பா.ஜ., தான். என் மீது தான், தி.மு.க., அதிக வழக்குகளை பதிவு செய்துள்ளது; தி.மு.க., அரசுக்கு எதிராக பா.ஜ., மட்டுமே அதிக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. சட்டசபையில் கருணாநிதிக்கு படம் திறக்கும் விழாவிலும் நான் பங்கேற்றேன்.

முதல்வருக்கும், கவர்னருக்கும் சமரசம் செய்வது என் வேலையல்ல. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தர வேண்டிய மரியாதையை, பா.ஜ., தந்துள்ளது.

பா.ஜ, தொடக்கூடாத கட்சியா, கண்ணில் பார்க்க கூடாத கட்சியா? ஜாதி ஆதிக்க வெறி இருப்பதால் தான், பழனிசாமி ரகசிய உறவு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

தி.மு.க.,வோ, கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவிற்கு, ராஜ்நாத் சிங்கை அழைத்து, அந்த செய்தியை டில்லி வரை கொண்டு சென்றது. 'நானே நாணயத்தை வெளியிடுகிறேன்' என்று கூறி, எம்.ஜி.ஆர்., புகழை பட்டிதொட்டி எல்லாம் அ.தி.மு.க., கொண்டு சேர்க்கவில்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us