ADDED : ஜூலை 31, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது இடத்தில் சென்னை சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனர் சிங்காரவேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் மகேந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் கோட்டத்தில் பொது மேலாளராக உள்ள பொன்முடி, கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனராக பதவி உயர்வில் செல்கிறார். திருநெல்வேலி கோட்ட பொது மேலாளர் இளங்கோவன், சேலம் கோட்ட நிர்வாக இயக்குனராக பதவி உயர்வில் செல்கிறார். கும்மிடிபூண்டி சாலை போக்குவரத்து நிறுவன பொது மேலாளர் தரசதன், திருநெல்வேலி கோட்ட நிர்வாக இயக்குனராக பதவி உயர்வில் செல்கிறார்.

