ADDED : ஏப் 02, 2024 02:10 AM
காரைக்குடி: சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று கோட்டையூர், பள்ளத்துார், புதுவயல், மித்ராவயல் உள்ளிட்ட பல பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மித்ராவயலில் பேசியபோது பெண்கள் சிலர் மருத்துவமனை வேண்டும். மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு சிதம்பரம் நான் பேசியபின் நீங்கள் மைக் போட்டு நன்றாக பேசுங்கள். பேசுவதற்கு எனக்கும் உரிமை உள்ளது. உங்களுக்கும் உரிமை உள்ளது என்றார்.
அவர் பேசி முடித்ததும் கிளம்பியதால் கூட்டத்தில் இருந்த பெண்கள் ஆத்திரமடைந்தனர். தங்களது குறைகளை கூட கேட்காத சிதம்பரத்தை திட்டி தீர்த்ததோடு கண்ணீருடன் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
அப்பகுதி பெண்கள் கூறுகையில் இங்கு உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெளியூருக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. மருத்துவமனை அமைக்கச் சொல்லி 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மதுக்கடையால் பிரச்னை உள்ளது. நான் பேசி முடித்தவுடன் நீங்கள் பேசுங்கள் என்று கூறியவர் பேசி முடித்ததும் சென்று விட்டார். பிறகு எப்படி நம்பி இவர்களுக்கு ஓட்டு போடுவது என்றனர்

