ADDED : ஜூன் 28, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விபரம், ஜூலை 1ல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அவை ஜூலை 1 காலை 10:00 மணிக்கு, அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தால் வெளியிடப் பட உள்ளன. அத்துறையின் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில், சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

