sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் அம்மன்:11 குறையின்றி வாழ...

/

தினமும் அம்மன்:11 குறையின்றி வாழ...

தினமும் அம்மன்:11 குறையின்றி வாழ...

தினமும் அம்மன்:11 குறையின்றி வாழ...


ADDED : ஜூலை 26, 2024 09:08 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 09:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை அருகிலுள்ள படவேடு ரேணுகாம்பாள், தன்னை நாடி வருவோரின் குறைகளைப் போக்கி நிம்மதி தருகிறாள்.

சுயம்பு வடிவில் தலையை மட்டும் அடையாளமாகக் கொண்ட இவள், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் உடனிருக்க 'அனைத்திற்கும் ஆதாரம் நானே' என உணர்த்துகிறாள். ஜமதக்னி முனிவரின் மனைவியும், மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் தாயும் ஆக இருப்பவள் ரேணுகாம்பாள்.

இவளை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட புண்ணியம் சேரும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜன ஆகர்ஷன சக்கரம் இங்கு உள்ளது. ஜமதக்னி முனிவர் ஆசிரமத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணே திருநீறாக தரப்படுகிறது. இதனால் பிணிகள் தீரும். தீயசக்தி அண்டாது. ஆடி வெள்ளியன்று திருவிழா நடக்கிறது.

எப்படி செல்வது* போளூரில் இருந்து 23 கி.மீ.,

* திருவண்ணாமலையில் இருந்து 61 கி.மீ.,

நேரம் காலை 6:30 - 1:00 மணி மதியம் 3:00 - 8:30 மணி

தொடர்புக்கு 94429 71595






      Dinamalar
      Follow us