ஸ்ரீரங்கம் கோவிலில் வெங்கய்யா நாயுடு சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் வெங்கய்யா நாயுடு சுவாமி தரிசனம்
ADDED : ஏப் 07, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை வந்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தெற்கு கோபுரம் வழியாக உள்ளே சென்றார்.
தொடர்ந்து, பேட்டரி காரில், மூலவர் பெரிய பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதிகளுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு நினைவு பரிசாக, சயனக் கோலத்தில் பெருமாள் படம் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், வெங்கய்யா நாயுடுவுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

