ADDED : ஏப் 18, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:தமிழக அனல், புனல், காற்றாலை, சூரிய ஒளி, மத்திய மின் தொகுப்பு மூலம், 19,064 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். காற்றாலைகள் மூலம், 8,924 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று சீசனில் காற்றாலை மின் உற்பத்தி, 5,000 மெகாவாட்டுக்கு மேல் அதிகரிக்கும். தற்போது கோடைகாலம் என்பதால் உற்பத்தி சரிந்துள்ளது. கடந்த, 15ல், 945 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று முன்தினம் 142, நேற்று 4 மெகாவாட் ஆக சரிந்தது. நேற்று முன்தினம் 19,171 மெகாவாட்டாக இருந்த தமிழக மின் உற்பத்தி நேற்று, 17,447 மெகாவாட்டாக இருந்தது.

