ADDED : மே 06, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: 'தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு, 45 - 58 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், தமிழக கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில், கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரம் வரை எழுந்தன.
இதையடுத்து, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்செந்துார் முருகன் கோவில் முன் கடலில் பக்தர்கள் குளிக்க, போலீசார் நேற்று மதியம் 12:00 மணி முதல் தடை விதித்தனர். மாலை வரையிலும் தடை தொடர்ந்தது.