அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
அகதிக்கு இழப்பீடு வழங்க எதிர்ப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ADDED : ஆக 22, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்டம் மேலுார் அருகே திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில், மழையின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில், சிறுமி இறந்தார். அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. இயற்கைப் பேரிடரில், சிறுமி இறந்ததற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கூடாதா? மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.