ADDED : ஏப் 07, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் அமைச்சர்களை வரவேற்க தி.மு.க., வினர் தேசிய கொடி கம்பத்தில் தி.மு.க., கொடியை பறக்கவிட்டதால் மக்கள் அதிருப்தியைடந்தனர். -
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து நரிக்குடியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஓட்டு சேகரித்தனர். அவர்களை வரவேற்க அக்கட்சியினர் தி.மு.க., கொடி, தோரணம் கட்டினர்.
ஊராட்சி அலுவலகத்தில் இருந்த தேசிய கொடி கம்பத்தில் தி.மு.க., கொடியை பறக்கவிட்டனர். இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.

