தி.மு.க., ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே இயங்குகிறது: தினகரன்
தி.மு.க., ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே இயங்குகிறது: தினகரன்
ADDED : செப் 16, 2024 02:08 AM

காரைக்குடி: காரைக்குடியில் அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அளித்த பேட்டி:
கொரோனா தொற்று காலத்தில் பலர், மது இன்றி, உடல் நலம் பாதிக்காமல் இருந்துள்ளனர். அதனால், படிப்படியாக மது ஒழிப்பு என்பது சாத்தியம் தான்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஸ்டாலின் வெளிநாடு சென்று திரும்பியது, எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்று வருகிறார் என்று சொல்லும் கதை தான். அமெரிக்கா சென்று வந்த முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டும் தான் உள்ளன.
வேறு எந்த தகவலும் இல்லை. பழனிசாமி தலைமையில் நடந்த ஆட்சி தான் தமிழகத்தில் மோசமாக இருந்தது. ஆனால், பழனிசாமியின் நான்கு ஆண்டு ஆட்சியை விட தற்போதைய தி.மு.க., ஆட்சி மிகமோசமாக உள்ளது.
தி.மு.க., ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே இயங்குகிறது. அதனால் தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் பணத்தை பயன்படுத்தி தான், வலுவான தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.,வின், 'பி' டீமாக தான் பழனிசாமி உள்ளார்.
பிரபலமடையும் நோக்கில் தான், சீமான் எதிர்மறையான கருத்துகளை பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

