ADDED : ஜூன் 28, 2024 11:39 PM
சென்னை:'ஜூனில் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், அவற்றை ஜூலை மாதம் முழுதும் வாங்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை முதன்மை செயலர் விடுத்த செய்திக் குறிப்பு:
தமிழக ரேஷன் கடைகளில் மாதந்தோறும் கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. ஜூனில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத கார்டுதாரர்கள், ஜூலையில் பெற்றுக் கொள்ளலாம் என, சட்டசபை மானிய கோரிக்கையின் போது, உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், ஜூனில் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் வசதிக்காக, ஜூலையில் பெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கார்டுதாரர்களின் நன்மை கருதி, ஜூனில் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், அவற்றை ஜூலை துவக்கத்தில் இருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

