'அரசு மருத்துவர்களின் கல்வி வாய்ப்பு பறிப்பு':பழனிசாமி அறிக்கை:
'அரசு மருத்துவர்களின் கல்வி வாய்ப்பு பறிப்பு':பழனிசாமி அறிக்கை:
ADDED : ஜூலை 12, 2024 02:44 AM
அரசு பணியில் உள்ள மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான, ஒரு சில பாடப்பிரிவுகளைத் தவிர, மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை, அரசு ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை பறிக்கும் மோசமான செயல். மருத்துவர்கள் தங்கள் நேரத்தை, உழைப்பை, பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தி இருக்கின்றனர்.
இதற்கு பதிலாக, அரசு அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் வழியாக, அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளை தகர்த்துள்ளது, கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த உத்தரவு பட்ட மேற்படிப்புகளை படிக்க விரும்பும், அரசு பணியில் உள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

