ADDED : மே 30, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்காக, பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தலைமை அலுவலகம், சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ளது.
பொறியாளர் சங்கத்தின் தலைவராக மணிகண்டன், துணை தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், லால் பகதுார், அருள், விஜயகுமார், பொதுச் செயலராக தனசேகரன் உள்பட, 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
உதவி பொறியாளர்கள் சங்க தலைவராக சீனிவாசன்; துணைதலைவராக மதன், பொதுச்செயலராக கிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வாகினர்.