ADDED : ஆக 28, 2024 11:31 PM
சென்னை:டெல்டா மாவட்டங்களில், இன்று முதல் இரண்டு நாட்கள், பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் திட்டம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து, இம்முகாமை நடத்துகின்றன. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இன்றும், நாளையும் முகாம் நடக்க உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., படித்த, 18 முதல் 21 வயது வரை உள்ள பெண்கள், 1,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சிக் காலம் 12 மாதங்கள். மாதம் 12,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். உணவு, போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

