sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

/

வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு


ADDED : ஜூலை 28, 2024 04:19 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்-கும் திட்டத்தின் கீழ், அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகை-யில், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 5 லட்சம் ரூபா-யில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை உத்தரவிட்டுள்ளது.

படித்து வேலையில்லாமல் ஏழ்மையில் உள்ள இளைஞர்கள், சுயதொழில் துவங்கி தொழில்முனைவேராக உருவெடுக்க, அவர்-களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

வர்த்தகம் சார்ந்த தொழில் துவங்க, திட்ட மதிப்பீட்டில் அதிகபட்-சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு மானியமாக, 25 சதவீதம் அல்லது அதிகபட்சம், 3.75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்

படுகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு. பயனாளியின் குடும்ப ஆண்டு வருவான உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இந்த உச்சவரம்பு குறைவாக இருப்பதால், திட்டத்தில் பலர் பயன்பெற முடியவில்லை. எனவே, ஆண்டு வருமான உச்சவ-ரம்பை உயர்த்துமாறு, அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதைய-டுத்து உச்சவரம்பு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், சட்டச-பையில் சமீபத்தில் அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் வகையில், உச்சவரம்பை 8 லட்சம் ரூபா-யாக உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2023 - 24ல், 2,538 இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்காக, 28.14 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us