கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் * உயர்நீதிமன்றத்தில் தகவல்
கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் * உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஆக 05, 2024 10:32 PM
மதுரை:'சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
இளையாங்குடி அருகே வடக்கு சாலைக்கிராமம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பங்குனி திருவிழாவின்போது அதிக பக்தர்கள் தரிசனத்திற்கு வருவர். குறிப்பிட்ட சர்வே எண்ணில் கோயில், ஊருணி, வட்டக்கிணறு, வண்டிப்பாதை, ரோடு அமைந்துள்ளது. இங்கு சிலர் தகர கொட்டகைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், அறநிலையத்துறை இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிபிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: ஆக.,22 ல் கும்பாபி ேஷகம் நடைபெறும். பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம். வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.