இன்ஜி., தரவரிசை வெளியீடு 22ல் கவுன்சிலிங் துவக்கம்
இன்ஜி., தரவரிசை வெளியீடு 22ல் கவுன்சிலிங் துவக்கம்
ADDED : ஜூலை 11, 2024 02:13 AM

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, 2 லட்சம் மாணவ --- மாணவியருக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது.
அதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான, 1,99,868 மாணவ - மாணவியருக்கான தரவரிசை பட்டியலை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டார்.
கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் உடன்இருந்தார்.
தரவரிசை பட்டியலில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தாலோ அல்லது தங்கள் பெயர் விடுபட்டுஇருந்தாலோ, அதுகுறித்து கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியாக, இன்று முதல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என,
தொடர்ச்சி 7ம் பக்கம்

