ADDED : ஏப் 17, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் வழியாக, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
↓எர்ணாகுளத்தில் இருந்து, வரும் 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28ம் தேதிகளில் இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாளில் அதிகாலை 3:30 மணிக்கு பாட்னா செல்லும்
↓பாட்னாவில் இருந்து, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24, ஜூலை 1ம் தேதிகளில் இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாளில் காலை 10:30 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

