ADDED : மார் 25, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
பிளஸ் 2க்கு பின், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே குழப்பமாக இருக்கும். இந்த விஷயத்தில், பெற்றோரும், பிள்ளைகளும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்வு இன்றி, மருத்துவ படிப்பில் ஏராளமான படிப்புகள் உள்ளன.
மருத்துவத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினால், அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கால்நடை, மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கும், வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 'நுண்கலை' போன்ற படிப்புகள் சினிமா துறைக்கு உதவும்.
கேட்டரிங், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தங்களுக்கு விருப்பமான சரியான படிப்பை தேர்வு செய்தால், வேலைவாய்ப்பில் நினைத்த இலக்கை எட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

