ADDED : ஆக 15, 2024 06:45 PM

வேண்டிய வரங்களை அள்ளித் தருகிறாள் வேலுார் செல்லியம்மன்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பொம்மி, திம்மி என்ற சகோதரிகள். குடும்பப் பிரச்னையால் வேலுார் பாலாற்றங்கரைக்கு வந்தனர். சோழ மன்னரிடம் அனுமதி பெற்று இப்பகுதியிலே தங்கினர். இங்கு அருள்புரியும் சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரியை தங்களின் குலதெய்வமாக ஏற்றனர்.
ஒருநாள் ஊருக்குள் புகுந்த கொள்ளையர்களை அம்மனின் அருளால் பொம்மியும், திம்மியும் விரட்டி அடித்தனர். விஷயத்தை அறிந்த மக்கள் அன்று முதல் சாமுண்டீஸ்வரியை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டனர். அம்மனுக்கு இவர்கள் சூட்டிய பெயர்தான் செல்லியம்மன்.
கருவறையில் சப்தமாதர்கள் புடைப்புச் சிற்பமாக காட்சி தர, அவர்களில் செல்லியம்மன் தனித்து அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு அழைப்பு வைத்த பிறகே சுபநிகழ்ச்சிகளை ஆரம்பிக்கின்றனர். கல்வி, திருமணம், குழந்தை என வேண்டிய வரங்களை கொடுக்கிறாள். வேண்டுதல் நிறைவேறியதும் புடவை சாத்தி மாவிளக்கு ஏற்றுகின்றனர்.
எப்படி செல்வது
வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - 12:00 மணி மதியம் 3:00 - 10:00 மணி
தொடர்புக்கு
95978 88491

