ஊட்டி நாய்கள் கண்காட்சி ஜெர்மன் ஷெப்பர்டு சாம்பியன்
ஊட்டி நாய்கள் கண்காட்சி ஜெர்மன் ஷெப்பர்டு சாம்பியன்
ADDED : மே 12, 2024 08:39 PM

ஊட்டியில் நடந்த மூன்று நாள் நாய் கண்காட்சியில், லக்னோவை சேர்ந்த சித்தார்த் சர்மா என்பவரின், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 'பெஸ்ட் இன்ஷோ' பரிசை தட்டி சென்றது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில், 10ம் தேதி, 134, 135 வது நாய் கண்காட்சி துவங்கியது. முதல் நாளில் கீழ்படிதல் போட்டி நடந்தது. நேற்று, அனைத்து நாய்கள் பங்கேற்ற கண்காட்சி மற்றும் போட்டிகள் நடந்தது.
அதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், 'ஜெர்மன் ஷெப்பர்ட், ஹஸ்கி, கோல்டன் ரெட்ரீவர், இங்கிலீஷ் காக்கஸ் ஸ்பேனியல், மவுண்டன் டாக், சிட்சூ, ராட்வீலர், பெல்ஜியம் மெலோனஸ், பிரென்ச் பூல்டாக், நியூ பவுண்ட்லேண்ட், கயிலாய கிங் சார்லஸ், மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராஜபாளையம், கோம்பை மற்றும் சிப்பிப்பாறை நாய்கள்,' என, மொத்தம், 435 நாய்கள் பங்கேற்றன.
ஜெர்மன் ஷெப்பர்டு 'கிங்'
இறுதி நாளில் நடந்த போட்டியில், 220 நாய்கள் பங்கேற்றன. அதில், காலை முதல் மாலை வரை நடந்த பல்வேறு போட்டிகளில், லக்னோவை சேர்ந்த சித்தார்த் சர்மா என்பவரின், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 'பெஸ்ட் இன்ஷோ' பரிசை தட்டி சென்றது. பரிசை பிலிபைன்ஸ் நாட்டின் நடுவர் மரியோ மக் ஷே ஷே வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற நாய்களின் புத்தி கூர்மை, திறமைகளை கண்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் வியந்தனர்.