ADDED : மே 09, 2024 08:21 PM

ஊட்டி:பெண் போலீஸ் குறித்து அவதூறு பேசிய சவுக்கு சங்கர் மீது ஊட்டி பெண் இன்ஸ்பெக்பர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சென்னையை சேர்ந்தவர் சவுக்கு சங்கர், யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். அண்மையில் தனியார் யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சியில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி இந்த விவகாரம் குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர்.