ADDED : மே 24, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் கடந்த, 8 மாதங்களாக கிடப்பில் உள்ள, பட்டாசு ஆலைகள் மீதான தடையை நீக்க கோரும் மனுக்கள், உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், 'பேரியம் நைட்ரேட்' என்ற பச்சை உப்பு பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி கோரியும், இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை, பட்டாசு ஆலைகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.