'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள் நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'
'உணவு, கூட்டுறவு துறை அமைச்சர்கள் நவக்கிரகம் போல செயல்படுகின்றனர்'
ADDED : ஜூலை 23, 2024 08:47 PM
தமிழகத்தில் தொழில் துறைனருக்கு போதிய மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் வைத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு கூறியுள்ளது.
பாமாயிலுக்கான மத்திய அரசின் மானியம் கிடைத்து வந்தது. அது, நிறுத்தப்பட்டதும், அ.தி.மு.க., ஆட்சியில் மாநில அரசு மானியத்தை வழங்கியது. ஆனால், தி.மு.க., லோக்சபா தேர்தலைக் காரணம் காட்டி பருப்பு, பாமாயில் கொள்முதலை நிறுத்தி வைத்து விட்டது. தேர்தலுக்குப் பின்னும் நிலைமை சீராகவில்லை. ரேஷன் கடைகளில், பருப்பு, பாமாயிலை முறையாகக் கொடுப்பதில்லை.
உணவுத்துறையும், கூட்டுறவுத் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும். ஆனால் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமியும் நவக்கிரகம் போல ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துப் பேச, 'பொம்மை' முதல்வருக்கு திராணி இல்லை.
பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்

