ADDED : ஆக 30, 2024 05:44 AM

பண்ருட்டி: இரும்பு கேட்டை திறந்தவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
பண்ருட்டி, கடலுார் சாலையை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ.,. தங்கவேலு மகன் பிரபுராஜ்,55; பாரத் காஸ் டீலரான இவர், நேற்று இரவு 7:00 மணிக்கு வீட்டின் பக்கத்தில் உள்ள தனது அண்ணன் ஜோதியுடன் பேசிவிட்டு வீட்டின் இரும்பு கேட்டை திறந்தார்.
அப்போது, மின்சாரம் தாக்கி, கேட்டை பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்தார். அதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி அமுதலட்சுமி,45; மகன் விமல்ராஜ்,20; ஆகியோர் ஓடிவந்து பிரபுராஜை பிடித்தனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியது.
இதை பார்த்த பிரபுராஜ் அண்ணன் ஜோதி ஓடிவந்து, மின் இணைப்பை துண்டித்ததும், மூவரும் கீழே விழுந்தனர். அவர்களில் பிரபுராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

