நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
நத்தம் அருகே கோர விபத்து ; 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
ADDED : ஆக 22, 2024 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
நத்தத்தில் இருந்து அழகர்கோவில்-க்கு இயங்கும் தனியார் CBSE பள்ளிக்கு சொந்தமான பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, முடக்கு சாலை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வந்த வந்து கொண்டிருந்தனர்.
ராங் ரூட்டில் வந்ததால் பள்ளி பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், அதில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் லிங்கவாடியைச் சேர்ந்த முருகன்,40, மனைவி பஞ்சு, மகன் ஸ்ரீதர்,6, என தெரிய வந்துள்ளது.
உடலைக் கைப்பற்றிய நத்தம் போலீசார் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.