பள்ளி ஆசிரியர் கொலை வழக்கில் இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
பள்ளி ஆசிரியர் கொலை வழக்கில் இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ADDED : ஆக 21, 2024 01:34 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடந்த ஜூன் மாதம் கே.பாப்பாங்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் 51,டூவீலரில் பள்ளிக்கு சென்ற போது கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கே.வேப்பங்குளம் முத்துராமலிங்கம் மகன் அரியப்பன் 40, இவரது சகோதரர் முருகன் 30, முத்தலாங்குளம் சக்கரைசாமி மகன் வினோத்குமார் 23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அரியப்பன் ஜூலை மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானர். முருகன், வினோத்குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. மதுரை மத்திய சிறையில் உள்ள வினோத்குமார், ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள முருகன் ஆகியோரிடம் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

