மதுரையில் முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம்
மதுரையில் முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம்
ADDED : பிப் 15, 2025 04:39 AM

மதுரை : சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வி.லட்சுமிநாராயணன், பி.வடமலை 2023 ல் நியமிக்கப்பட்டனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
பணிச்சுழற்சி முறையில் தற்போது இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரிக்கின்றனர். வழக்கமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் நடைபெறும்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மதுரைக் கிளையில் 3 நாட்களாக வழக்குகளை
விசாரித்தார்.
இதனால் இரு நீதிபதிகளுக்கும் நேற்று நிரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மதுரைக் கிளையில் பதவிப்பிரமாணம் நடந்தது இதுவே முதல்முறை.
நிர்வாக நீதிபதி ஜெ.நிஷாபானு, இதர நீதிபதிகள், பதிவாளர் ஜெனரல் அல்லி, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 75. தற்போது 56 நிரந்தர நீதிபதிகள், 9 கூடுதல் நீதிபதிகள் உள்ளனர்.