விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது நான்தான்: துரைமுருகன்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது நான்தான்: துரைமுருகன்
ADDED : பிப் 25, 2025 04:11 AM
ராணிப்பேட்டை : ''நான் விவசாயி என்பதால், விவசாயிகளோடு நேரடி தொடர்பில் உள்ள துறையை கேட்டு பெற்றேன்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் நடந்த அரசு விழாவில் அவர் பேசியதாவது:
தற்போது நீர்வளத்துறை அமைச்சராக இருப்பதால், தமிழகத்திலுள்ள ஆறு, குளங்கள், நீர்த்தேக்கங்கள் பராமரிக்கும் பணியும், பொறுப்பும் உள்ளது. நான் விவசாயிகளுடன் நேரடி தொடர்பிலுள்ள துறை வேண்டுமென்று கேட்டு பெற்றேன்.
ஏனென்றால் நானே விவசாயி தான். எனக்கு தான், உங்கள் கஷ்டம் தெரியும். நான் அமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் கோப்புகளின் கையெழுத்திட்டவன்.
விவசாய நிலத்தில் ஏர் உழுது, களை நீக்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தவன் நான். எங்களுக்கு விவசாய நிலம், பம்பு செட் இருந்தது. அதற்கு கரண்ட் பில் கட்டக்கூட, பணம் இல்லாத வறுமை.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கரண்ட் பில் கட்ட, என் தாய் ஒவ்வொரு நகையாக கழற்றிக் கொடுத்து விட்டு, கடைசி காலத்தில் மூக்கு, காதில், குண்டுமணி நகை இல்லாமல், காதில் வெறும் துடைப்பக் குச்சி குத்தியிருந்த நிலையில் உயிர் விட்டார்.
அதனால், இனி எந்த விவசாயியும் கரண்ட் பில் கட்டக்கூடாது என, உத்தரவு போட்டவன்தான் இந்த துரைமுருகன்.
இவ்வாறு பேசினார்.

