காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மே 30, 2024 11:43 PM
சென்னை:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர்கிடைத்து வருகிறது..
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நீர் வழங்கும் காலம் துவங்கி, அடுத்தாண்டு மே மாதத்தில் முடியும்.
நடப்பாண்டுக்கான நீர் வழங்கும் காலம், இன்றுடன் முடிய உள்ளது. இதுவரை, 81 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. மே மாதம் சுற்றுச்சூழல் ஓதுக்கீட்டிற்கு, 2.50 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மத்திய நீர்வளத்துறையின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, கடந்த 28ம் தேதி வரை, 2.39 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.