ADDED : மார் 07, 2025 12:59 AM

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, கள்ளபிரான் புரம் பகுதியில், எஸ்.என்.ஜே., குழுமத்தின் மதுபான ஆலை செயல்படுகிறது. அங்கு நேற்று காலை 11:30 மணியில் இருந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை அருகே கல்லாக்கோட்டை என்ற இடத்தில் செயல்படும், கால்ஸ் குழுமத்தின் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது
விழுப்புரம், எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று காலை 11.00 மணியில் இருந்து, இரவு 8:00 மணியை தாண்டியும் சோதனையில் ஈடுபட்டனர்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையத்தில், 'சிவா டிஸ்டிலரீஸ்' என்ற மதுபான தொழிற்சாலை செயல்படுகிறது. அங்கு, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிற்சாலை அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை 6:00 மணி வரை வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.