ADDED : செப் 02, 2024 03:53 AM

மூணாறு: கேரள மாநிலம், மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் அரிசி கொம்பன், சக்கை கொம்பன், முறிவாலன் கொம்பன் என, மூன்று ஆண் காட்டு யானைகள் வலம் வந்தன. அவற்றில், அரிசி கொம்பனை வனத்துறையினர் கடந்தாண்டு ஏப்., 29ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின், சக்கை, முறிவாலன் கொம்பன்களின் நடமாட்டம் அதிகரித்தது. இரண்டு யானைகளும் ஆக., 21ல் பலமாக மோதிக் கொண்டன.
அதில், சக்கை கொம்பன் தந்தங்களால் குத்தியதில் முறிவாலன் கொம்பனின் பின் பகுதியில், 15 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடிய கொம்பனை, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.
சின்னக்கானல் விலக்கு பகுதியில் இருந்து 500 மீட்டரில் முறிவாலன் கொம்பன் நடக்க இயலாத நிலையில், இரண்டு நாட்களாக கிடந்தது.
மூணாறு வனத்துறை அதிகாரி ஜோப் ஜே.நேரியம்பரம்பில், தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி ஆகியோர் யானையை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டனர்.
வனத்துறை கால்நடை டாக்டர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி யானை நேற்று இறந்தது.