சட்டம் - ஒழுங்கு உறுதி தேவை! காங்கிரஸ் எச்சரிக்கை
சட்டம் - ஒழுங்கு உறுதி தேவை! காங்கிரஸ் எச்சரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 06:36 AM

சென்னை : “தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,” என, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழக காவல் துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
இனி வரும் காலங்களில், அரசுக்கு எவ்விதமான கெட்டப் பெயரும் ஏற்படாமல், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, பல கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பேச்சு அதிகரித்துள்ள நிலையில், படுகொலை சம்பவம் அரங்கேறி உள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

